fbpx
Homeபிற செய்திகள்ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

ஒலிம்பியாட் செஸ் போட்டி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

நெல்லை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் இருந்து ஒலிம்பியாட் சதுரங்கப் போட்டி 2022 மாமல்லபுரத்தில் நடை பெறுவதை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத் தான் விழிப்புணர்வு ஓட்டத்தினை இன்று சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப், மேயர் பி.எம் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜீ, நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையர் வி.ஆர். சீனிவாசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்

இதில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஓட்டம் அண்ணா விளை யாட்டு அரங்கில் இருந்து தொடங்கி அரசு தலை மை மருத்துவமனை வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கை அடைந்தது

இந்த மினி மாரத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்

மாணவர்கள் கையில் செஸ் அட்டை போன்ற வடிவ¬ மப்பை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத் தினார்கள் இந்நிகழ்ச்சியில் மண்டல முதுநிலை மேலாளர் திரு வீரபத் திரன் அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, சதுரங்க கழக பொறுப்பாளர்கள் பால்குமார், செல்வ மணிகண்டன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு வீரர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img