fbpx
Homeபிற செய்திகள்ஒருங்கிணைந்த பேறு கால அவசர சிகிச்சை மையம் தருமபுரி மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு

ஒருங்கிணைந்த பேறு கால அவசர சிகிச்சை மையம் தருமபுரி மருத்துவமனையில் புதிய கட்டடம் திறப்பு

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒருங் கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மையத்துக்கான புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

பொதுப் பணித்துறை சார்பில், தருமபுரி அரசு மருத் துவக்கல்லூரி மருத் துவமனையில் ஒருங்கி ணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசுதீவிர சிகிச்சை பராம ரிப்பு மையத்துக்கு ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட, தேசிய நல்வாழ்வு இயக்க குழும இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் ஒருங்கிணைந்த பேறுகால அவசரசிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடம் கட்டும் பணி கடந்த 26.06.2019-ல் தொடங்கப்பட்டு, 01.09.2021 அன்று பணி நிறைவடைந்துள்ளது.

இக்கட்டடத்தில் கீழ்தளம் மற்றும் நான்கு தளங்கள் உள்ளன. கீழ்தளம் 345,00 சதுர மீட்டர் பரப்பளவிலும், தரைத்தளம் 1179.00 சதுர மீட்டர் பரப்பளவிலும், முதல்தளம் 1261.00 சதுரமீட்டர் பரப்பளவிலும், இரண்டாம் தளம் 1179.00 சதுர மீட்டர் பரப்பளவிலும், மூன்றாம் தளம் 1096.00 சதுரமீட்டர் பரப்பள விலும் என மொத்தம் 5060.00 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கீழ்தளத்தில் அவசர ஊர்தி மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம், ஆக்சிஜன் கட்டுப்பாட்டு அறை, பார்வை யாளர்கள் காத்திருப்பு பகுதி, மருந்தகம் மற்றும் மின்அறை ஆகியவையும், தரைத்தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவுகள், காத்திருப்பு அறையும், முதல் தளத்தில் அறுவை அரங்குகள், தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவபின் கவனிப்பு பிரிவும், இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும், மூன்றாம் தளத்தில் பிரசவபின் கவனிப்பு பிரிவுகள் மற்றும் தனிமைப் படுத்தப்பட்ட பிரிவும் அமையப் பெற் றுள்ளது.

இம்மையத்தில் சிகிச்சை பெற ஏதுவாக தரைத்தளத்தில் 33 படுக்கைகளும், முதல்தளத்தில் 22 படுக்கைகளும், இரண்டாம் தளத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான 95 படுக்கைகளும், மூன்றாம் தளத்தில் 50 படுக்கைகளும் என மொத்தம் 200 படுக்கை வசதிகள் உள்ளன.

இதன்மூலம் கர்ப்பிணிகளுக்கும், பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img