நாட்டின் மிக நம்பகமான தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், ஒரு தனித்துவமான நவீன பாதுகாப்பு தீர்வான எஸ்பிஐ லைப் இஷீல்டு நெக்ஸ்ட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நவீன பாதுகாப்பு தீர்வான இஷீல்டு நெக்ஸ்ட் லெவல்-அப் அம்சம் கொண்டது.
விருப்பம் 1: பாதுகாப்பை அடையும் பலன் இதில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்த தொகை பாலிசி காலம் முழுவதும் ஒரேமாதிரியாக இருக்கும்.
விருப்பம் 2: பாதுகாப்பை உயர்த்தும் பலன் – இதில், பாலிசியின் ஒவ்வொரு 5 ஆண்டு முடிவிலும் இருக்கும் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படைத் தொகையில், ஒவ்வொரு ஆண்டும் (எளிமையாக) 10 சதம் வீதம் மரணத்தில் உறுதிப்படுத்தப்பட்ட முழுமையான தொகை அதிகரிக்கும்.
விருப்பம் 3: எதிர்கால காப்பு பலன்களுடன் பாதுகாப்பை அடைதல் திருமணமாவது, பெற்றோர் ஆவது, புதிதாக வீடு வாங்குவது என்று வாழ்வின் முக்கியக்கட்டங்களை அடையும்போது தானாகவே தங்களது பாதுகாப்பை உயர்த்தும் வாய்ப்பை நுகர்வோருக்கு வழங்குகிறது.
அப்போது, எவ்வித மருத்துவப் பரிசோதனைகளும் உட்படுத்தப்படுத்தப்பட மாட்டாது.
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸின் தலைவர் எம்.ஆனந்த் பேசுகையில், அதிகளவில் உள்ள நிலையற்ற தன்மையுடன், இன்றைய வாழ்க்கைத் தேவைகளை எதிர்கொள்ள உதவுவது மட்டுமல்லாமல் ஒருவரது வாழ்வில் உருவாகும் முன்னுரிமைகளையும் கவனிக்கும் வகையில் ஆயுள் காப்பீடு அல்லது நிதி திட்டமிடுதல் சார்ந்த அணுகுமுறையில் நிலையை உயர்த்துதல் மிக முக்கியம்.
எஸ்பிஐ லைப் இஷீல்டு நெக்ஸ்ட் ஒரு விரிவான நிதி பாதுகாப்பு தீர்வாகும்.
நுகர்வோர் வாழ்வில் உருவாகும் தேவைகளுக்கேற்ப, தங்களது ஆயுள் காப்பீட்டு பாலிசியை வடிவமைப்பதற்கான தன்னாட்சியை வழங்குகிறது எஸ்பிஐ லைப் இஷீல்டு நெக்ஸ்ட்.
ஒரேயொரு பாலிசியின் கீழ் நுகர்வோரின் தற்போதைய, எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இதிலுள்ள பல நன்மைகள் அனுமதிக்கும் என்றார்.
எஸ்பிஐ லைப் இ-ஷீல்ட் நெக்ஸ்ட் திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து
கொள்ள கீழ்கண்ட இணைப்பை க்ளிக் செய்யவும்:
https://www.sbilife.co.in/en/online-insurance-plans/eshield-next



