fbpx
Homeபிற செய்திகள்‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் தையல் இயந்திரம் வழங்கிய முதல்வருக்கு நன்றி - கோவைப் பெண்...

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் தையல் இயந்திரம் வழங்கிய முதல்வருக்கு நன்றி – கோவைப் பெண் உருக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ நிகழ்வில் தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்திருந்தேன். என் வாழ்வாதாரம் உயர இலவசமாக தையல் இயந்திரம் வழங்கிய முதல்வருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் கோவைப் பெண்.

முதல்வர் தேர்தல் பரப்புரையில், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதனை நிறைவேற்றும் வகையில், முதல்வராக பொறுப் பேற்ற பின்னர் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறையை உருவாக்கி இத்துறைக்கு சிறப்பு அலுவலர்களை நியமித்தார்.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய, குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.

மனுக்களில் கொடுக்கப் பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் மூலம் 38219 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 2898 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளன.

மீதமுள்ள மனுக்களின் தகுதியுடைய அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் 11 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 1 நபருக்கு ரூ.2.5 இலட்சம் மதிப்பில் கல்விக் கடனுதவி, 3 நபர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ரூ.6.5 இலட்சம் மதிப்பில் கடனுதவி, 141 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம் 1364 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் குறைகளும், கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் முதல்வர் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

எனவே இந்த சிறப்புத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கள ஆய்வுகளை துரிதப்படுத்தி விரைவில் மீதமுள்ள அனைத்து மனுக்களுக்கான தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பயனாளி :
கோவை மாவட்டம், புது சித்தாப்புதூர், இளங்கோ நகரில் வசித்து வருகிறேன். என் பெயர் தேவி. என் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எங்கள் குடும்பத்தை நடத்துவதற்கு அவரின் வருமானம் போதுமானதாக இல்லை.

இந்நிலையில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ நிகழ்வில் தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்திருந்தேன். தற்போது சமூக நலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

என் குடும்ப சூழ்நிலையை அறிந்து என் கோரிக்கையை ஏற்று இலவச தையல் இயந்திரத்தை வழங்கினார். இதன் மூலம் எங்கள் குடும்ப வாழ்வாதாரம் உயர வழிவகை செய்த முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படிக்க வேண்டும்

spot_img