இந்திய அரசின் நிதிச் சேவைத் துறையின் அறிவுறுத்தலின் கீழ், 2022 ஆம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்தின் எட்டாவது பதிப்பு “மனித குலத்திற்கான யோகா” என்ற கருப்பொருளின் கீழ் 21 ஜூன் 2022 அன்று இந்தியாவில் உள்ள 75 முக்கிய இடங்களில் கொண்டாடப்படுகிறது.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் முக்கிய இடங்களில் ஒன்றாக கோவை தேர்வு செய்யப்பட்டு, கோவை மண்டல அலுவலகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் யோகாசனம் நடத்தப்பட்டது.
வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் என். விஜயா, உதவி பொதுமேலாளர்கள் ஜி.ஜி.ஜெயசங்கர், சஞ்சய் குமார் ஜா மற்றும் திரு மனோஜ் தியோ வர்மா ஆகியோர் முன்னிலையில் சுமார் 150 ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
யோகா பயிற்சியை வாழும் கலை அமைப்பின் யோகா பயிற்சியாளர் உண்ணாமலை அளித்தார்.



