fbpx
Homeபிற செய்திகள்ஆலாந்துறை அருகே யானை தாக்கி விவசாயி பலி

ஆலாந்துறை அருகே யானை தாக்கி விவசாயி பலி

கோவை ஆலாந்துறை அருகே தோட்டத்தில் இரவு காவலில் இருந்த விவ சாயி யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். ஆலாந்துறை அருகே விராலியூரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 63). விவசாயி.

இவருக்கு சொந்தமான தோட்டம் போளுவாம்பட்டி வன சரகத்துக்குட்பட்ட ஆட்டுக் காரன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ளது. சின்னசாமி தினந்தோறும் தனது தோட்டத்துக்கு சென்று காவல் பணி செய்து அங்கேயே படுத்து தூங்குவது வழக்கம். வழக்கம் போல நேற்று இரவு இவர் காவல் பணிக் காக சென்றார்.

இரவு தோட்டத்தில் உள்ள வீட்டு முன்பு கட்டில் போட்டு படுத்து தூங்கினார். நள்ளி ரவு 1.30 மணியளவில் தோட்டத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை கட்டி லில் படுத்து தூங்கிய சின்ன சாமியை தாக்கி தூக்கி வீசியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இன்று அதி காலை 3 மணியளவில் தோட்டத்துக்கு சென்ற அவரது உறவினர்கள் யானை தாக்கி சின்னசாமி படுகாயம் அடைந்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சின்னசாமியை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் சின்னசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் மற்றும் போளுவாம்பட்டி வன அதிகாரிகளுக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆலாந் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img