திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாகப் பணிபுரிந்த 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கான பாராட்டு சான்றிதழ், வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.10,000 ரொக்கம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வழங்கி கௌரவித்தார்.



