fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர்கல்வி நிறுவனத்துடன் வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ஒப்பந்தம்

அவினாசிலிங்கம் மனையியல், மகளிர் உயர்கல்வி நிறுவனத்துடன் வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் ஒப்பந்தம்

கோவை அவினாசிலிங்கம் நிறுவனத்தின் உணவு அறிவியில் மற்றும் ஊட்டச்சத்து துறையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

சிறுதானியங்களின் உற்பத்திக்கானத் திறன், பயிற்சி மற்றும் ஆலோசனைகளும் தற்போதைய சூழலின் தேவையாகிறது. இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழக நிறு வனத்துடன் இணைந்து வளர்ந்து வரும் தொழில் முனைவோரை உருவாக் குவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து அறிவியலில் முனைவர் ராஜம்மாள் பி.தேவதாஸின் பங்களிப்பை மேற்கோள்காட்டிப் பேசிய வேந்தர் முனைவர் எஸ்.பி.தியாகராஜன், சிறுதானியங்களின் சார்பான ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம்-போஷன் அபியான் திட்டத்தின் தேசிய பணிக்கு ஆற்றிய பங்களிப்பினை பற்றிக் கூறினார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் இயக்குநர் முனைவர் விலாஸ் ஏ. டொனபி கூறுகையில்: இந்தியாவை ஆரோக்கியமான நாடாக மாற்றும் வகையில் ஊட்டச்சத்து துணை உணவு மேம்படுத்துவது வலுவான நிபுணத்துவம் கொண்ட பகுதியில் கூட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கான சாலை வரைபடத்தை அமைப்பதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதியளிக்கிறது என்றார்.

மக்களின் உணவில் சிறுதானியங்களைப் புகுத்தி அவர்களின் ஆரோக்கிய நிலையினை உயர்த்துவதற்கு இந்த ஒப்பந்தம் கண்டிப்பாக வழிவகுக்கும் என முனைவர் பிரேமா வதிவிஜயன் கூறினார்.

ஐஐஎம்ஆர் தலைமை நிர்வாகியும், முதன்மை விஞ்ஞானியுமான முனை வர் பி.தயாகர்ராவ் பேசும்போது, இரு நிறுவனங்களுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், வரும் சிறு தானிய பன்னாட்டு வருடமான 2023-ம் ஆண்டு சிறுதானிய அடிப்படையில் தயாரிக்கப்படும் பன்னாட்டு உணவு வகைகள் மற்றும் இந்திய மக்களுக்கான கையேடு தயாரிப்பதில் அவினாசிலிங்கம் நிறுவனம் தர அடையாளத் தூதராக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

அவினாசிலிங்கம் நிறுவனத்தின் துணைவேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன், இந்திய சிறு தானிய ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் விலாஸ் ஏ.டொனபி ஆகி« யார் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பதிவாளர் முனைவர் எஸ்.கௌசல்யா, புல முதன்மையர், மனையியல் புலம் முனைவர் என்.வாசுகி, முனைவர் ஏ.திருமணிதேவி, முதன்மை விஞ்ஞானி மற் றும் தலைமை நிர்வாக அதிகாரி -நியூட்ரி-ஹப் முனைவர் தியாகராவ், முதன்மை விஞ்ஞானி மற்றும் பிஎம்இ பொறுப்பு முனைவர் ஆர்.மதுசூதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img