கோவை தடாகம்ரோட்டில் உள்ள சிவாஜி காலனியில் உள்ள அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வீ.புஷ்பானந்தம் தலைமையில், சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமுக முன்னாள் கவுன்சிலர்கள் ராஜகோபால், விஜயகுமார் மற்றும் வழக்கறிஞர் குமாஸ்தா தேவராஜ், பாஜக சுரேஷ்குமார், மஞ்சேஸ்வரி காலனி பி.சுரேஷ்பாபு, சோமையாம்பாளையம் தினகரன், இடையர்பாளையம் ராஜேந்திரன், குமாஸ்தா லட்சுமி, ஜெபா, வர்ஷா, வர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



