கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20, கோவை வடக்கு மகளிர் வட்டம் 11, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ஆகியவை இணைந்து அதிநவீன எக்ஸ்ரே இயந்திரத்தை, சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு நன் கொடையாக வழங்கி உள்ளன.
இந்த இயந்திரம், மருத்து வமனை வளாகத்தில் புதுப் பிக்கப்பட்ட எக்ஸ்ரே பிளாக்கில் நிறுவப்பட்டது. இந்த திட்டத்திற்கான செலவு ரூ.7.5 லட்சத்தில், ரவுண்ட் டேபிள் “ஹீல்” முயற்சியின் கீழ் நிறைவேற்றப்பட்டது.
இந்த திட்டத்தினால் ஆண்டு தோறும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் முதல் 12 ஆயி ரம் நோயாளிகள் வரை இலவசமாக எக்ஸ்ரே எடுத்துக்கொள்ள உதவும்.
கோவை வடக்கு ரவுண்ட் டேபிள் 20 தலைவர் திபேந்தர் சிங், ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் சுபாஷ் கோயங்கா ஆகியோர் இத்த கவலை தெரிவித்தனர்.



