கோவையில் காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் செய்துவரும் நிலையில் கோவையில் மாநில செயற் குழு தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் அக்னி பாத் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி 50 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட் சியின் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியும் கையில் பக்கோடா தட் டை வைத்தும் நூதன முறையில் அக்னி பாத் திட்டத்திற்கு எதிராக அவர்களது கண்டனத்தை தெரிவித்தனர்.



