Homeபிற செய்திகள்“ஹாய் ஐ’ம் காப்பர்” புத்தகம்: ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்

“ஹாய் ஐ’ம் காப்பர்” புத்தகம்: ஸ்டெர்லைட் காப்பர் அறிமுகம்

தாமிரத்தின் முக்கியத்துவத்தையும், நவீன உலகிற்கு அதன் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், சென்னையில் ஷிமிசிசிமி சிஙீளி மாநாட்டில், அதன் தோற்றம் மற்றும் நவீன உலகை வடிவமைப்பதில் அதன் உறுதியான பங்கு குறித்த காபி டேபிள் புத்தகத்தை அறிமுகப்படுத்தியது.

இன்டர்நேஷனல் காப்பர் அசோசியேஷனின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குநர் மயூர் கர்மாகர், ஸ்டெர்லைட் காப்பர் தலைமை செயல் அதிகாரி ஏ. சுமதி ஆகியோர் இதை வெளியிட்டனர்.

70 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் “ஹாய் ஐ’ம் காப்பர்” என்ற சுவாரஸ்யமான தலைப்புடன் வந்துள்ளது.

கிமு 9000-ம் ஆண்டில் எகிப்திய நதிக்கரையில் தாமிரம் கண்டு பிடிக்கப்பட்டதிலிருந்து தற்போது வரையிலான அதன் முழு பயணத்தையும் புத்தகம் விவரிக்கிறது.

இன்று நாம் அறிந்த நவீன உலகத்தை உருவாக்குவதில் அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை மையமாகக் கொண்டுள்ளது.

உலோகத்தின் வாழ்க்கைச் சுழற்சியைக் கண்டறிந்து, மின்சாரம், பாதுகாப்பு, ஆட்டோமொபைல்ஸ், ஹெல்த்கேர், எஃப்எம்சிடி உள்பட பல்வேறு துறைகளில் அதன் துறைசார் பயன்பாடு குறித்த முழு விவரங்களை இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது.

விழாவில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஏ.சுமதி பேசுகையில், இந்த புத்தகம் தாமிரம் மற்றும் ஸ்டெர்லைட்டின் உருகும் கதையின் பயணத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில், ஸ்டெர்லைட் காப்பர் அதன் செயல் முறைகளை மேம்படுத்த தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தியுள்ளது. எரிசக்தி திறன், தாமிரத்தை மீட்டெடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் நாங்கள் உரிய புரிந்துணர்வோடு இஎஸ்ஜி தரநிலைகளை நிறுவன நெறிமுறைகளுக்கு உள்பட்டு பயன்படுத்தியுள்ளோம், என்றார்.

சர்வதேச காப்பர் அசோசியேஷன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மயூர் கர்மாகர் பேசுகையில், ‘உலகின் மூன்றாவது மிக அத்தியாவசியமான உலோகமான தாமிரம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகிறது.

பல துறைகளுக்கு முக்கிய மூலப்பொருளாக இருக்கும் இந்த உலோகத்திற்கான தேவை பெருந்தொற்றுக்கு பின்னர் நிலையான வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img