fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின நிகழ்ச்சி

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக சர்க்கரை நோய் தின நிகழ்ச்சி

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில், உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, சர்க்கரை நோயாளிகளுக்கான சங்கமம் என்ற கற்பித்தல் நிகழ்ச்சி கடந்த 13-ம் தேதி நடந்தது.

உலக சர்க்கரை நோய் தினம், உலகம் முழுவதும் நவ.14 அன்று கடைபிடிக் கப்படுகிறது. இதை முன்னிட்டு கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ணா மருத்துவனையில், உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி, ‘சங்க மம்’ என்ற 48-வது சர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை நோய் குறித்த கற்பித்தல் நிகழ்ச்சி மருத்துவமனை கலை யரங்கில் நடைபெற்றது.

டாக்டர் சுரேஷ் தாமோதரன், உட்சுரப்பியல் துறைத் தலைவர் “நீரிழிவு சிகிச்சைக்கான அணுகலின் முக்கியத்துவம்” பற்றி விளக்கினார்.
நவீன மருந்துகளின் பயன்பாடு, இரத்த சர்க்கரையை குறைப்பது மட்டுமல்லாமல், இதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் உடல் எடையை குறைக்க உத வுகிறது.


“டைப்ஐ நீரிழிவு” குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு வழங் கப்படும் நீரிழிவு பற்றிய கல்வி மற்றும் முக்கியத்துவம் முன்னுரிமை உளவியல் ஆதரவு பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் டாக்டர் பி.சுகுமாரன் தலைமை வகித்தார். சர்க்கரை நோய் நிபுணர் டாக் டர் சுரேஷ் தாமோதரன், ‘சர்க்கரை நோயின் பாதிப்புகள், அதற்கு எடுக்க வேண்டிய சிகிச்சை முறைகள், தவிர்க்க வேண்டிய உணவுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்’ குறித்து பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img