Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ‘கல்லூரி தின விழா’

ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் ‘கல்லூரி தின விழா’

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல் லூரியின் 31-வது ‘கல்லூரி தின விழா’ அண்மையில் நடைபெற்றது. விழாவில், கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் டி. பத்மாவதி வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா கல்லூரி மாணவியர் மற்றும் பேராசிரியர்களின் சாதனை களை உள்ளடக்கிய ஆண்டறிக்கையை வாசித் தார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் துணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினர் டிசிஎஸ்நிறுவனத்தின் தொழில் நுட்பப்பிரிவுத் தலைவர் சுபா நேதிலத் பேசும்போது, நமது தற் போதைய நிலைக்கும், நம் கனவுகளுக்கும் இடையே நாம் மட்டுமே இருக்கிறோம். எந்தத் தடைகளையும் சூழல்களையும் வெற்றி பெறும் வல்லமை நம்மிடம் இருக்கிறது என்றார்.

கல்வி, ஆய்வு, விளை யாட்டு போன்றவற்றில் சிறந்த மாணவியருக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. ஆய்வு களில் சிறந்து விளங்கிய மற்றும் ஆராய்ச்சிக்கான நிதியுதவி பெற்று சிறந்த பங்களிப்பை வழங்கிய பேராசிரியர்களும்பாராட் டப்பட்டனர்.

இள நிலை மற்றும் முதுநிலை இறுதி யாண்டு மாணவியருள் சிறந்த மாணவியருக்குக் கல்லூரி முதல்வர் பெஸ்ட் அவுட் கோயிங் விருது வழங்கினார்.

மாணவியரது திறமை களை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் சிறந்த மாணவியருக்குப் பரிசு களும் வழங்கப்பட்டன. கல்லூரி மாணவத்தலை வர் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img