Homeபிற செய்திகள்ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணிதத்துறை சார்பில், ‘கணிதம் மற்றும் புள்ளியியல் துறைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் ஒரு நாள் சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நடந்தது.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். ஆய்வுச் சுருக்கம் அடங்கிய நூலை வெளியிட்டார். சிறப்பு விருந் தினராகப் பங்கேற்ற சென்னை வி.ஐ.டி.கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் வி.பார்த்திபன் கருத்தரங்க உரையாற்றினார்.

மலேசியா பல்கலைக்கழக ஆக்சுவேரி யல் அண்டு குவான்டிடேட்டிவ் ஸ்டடீஸ் இயக்குநர் முனைவர் ராஜசேகரன் ராமசாமி கணிதம் மற்றும் புள்ளியியலின் பங்களிப்பு குறித்து இணையவழியில் பேசி னார். கருத்தரங்கில் 89 பேர் ஆய்வுக்கட் டுரை ளை சமர்ப்பித்தனர்.

கணிதத் துறைத் தலைவர் முனைவர் என்.உமா வரவேற்றார். கல்வியியல் புல டீன் முனைவர் எஃப் ஹென்னா ரேவதி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img