fbpx
Homeபிற செய்திகள்ஷிவ் நாடார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

ஷிவ் நாடார் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

ஷிவ் நாடார் ஃபவுண்டே ஷனின் உயர்கல்விக்கான 3-வது முயற்சியான ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் 2022-23 கல்வி ஆண்டுக்கான இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.

கம்ப்யூட்டர் சயின்ஸ், பொறியியல், வணிகம் மற்றும் பொருளியல் ஆகியவற்றில் 6 படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இந்த பல்கலைக்கழகம் அழைப்பு விடுக்கிறது.

இந்த ஆண்டு, பி.டெக் கம்ப்யூட்டர் சயின்சில் சைபர் பாதுகாப்பில் புதிய எதிர்க £லத்தை மையமாக கொண்ட நிபுணத்துவத்தை இந்த பல்க லைக்கழகம் அறிமுகப்படுத் தியுள்ளது.

கூடுதலாக பி.டெக் ஆர்ட்டிபிஷியல் இன்டெலி ஜென்ஸ், டேட்டா சயின்ஸ் மற்றும் பி.டெக். கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மையமாக கொண்டு) ஆகிய படிப்புகளை வழங்குகிறது.

‘ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் அன்ட் ஹியூமனிட்டீஸ்’ இல் புதிய பொருளாதார துறை யை தொடங்குகிறது. இது பி.எஸ்சி பொருளியலில் (டேட்டா அறிவியல்) புதிய வகை நிபுணத்துவங்களை வழங்குகிறது.

2022-23 கல் வியாண்டுக்கான புதிய திட் டங்கள் உள்பட அனைத்து படிப்புகளுக்கான சேர்க்கை விவரங்கள், பல்கலைக்கழக இணையதளமான லீttஜீs://ஷ்ஷ்ஷ்.sஸீuநீலீமீஸீஸீணீவீ.மீபீu.வீஸீ/ இல் கிடைக்கும்.

சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ஸ்ரீமன் குமார் பட்டாச்சார்யா பேசுகையில், “ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் இன்றைய மற்றும் நாளைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவை யான அறிவு, திறன்கள் மற்றும் அறிவியல் சிந்தனையுடன் நாட்டின் இளம்மனங்களை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது.

‘ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் அண்ட் ஹியூமனிட்டீஸ்’ இல் (SoSH) பொருளியல் துறையை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இது மாணவர்களை பகுப்பாய்வு ரீதியாக அணுகும் வகையில் அவர்களை வடிவமைக்கும்.

விஞ்ஞான ஆராய்ச்சியை விமர்சன சிந்தனை மற்றும் படைப்பாற்றலுடன் கலப்பதன் மூலம் அவர்களின் பகுத்தறிவு ஆற்றலை உருவாக்குகிறது.

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் துறையின் சைபர் பாதுகாப்பு குறித்த புதிய படிப்பு, தொழில்நுட்பத்தை அதிகளவில் நம்பி வரும் உலகில் டேட்டாக்களின் அனைத்து அம்சங்களையும் பாதுகாப் பதில் திறன்களை உருவாக்க மாணவர்களை அனுமதிக்கும்” என்றார்.

உதவித்தொகை தொடர் பான விவரங்கள் லீttஜீs://ஷ்ஷ்ஷ்.sஸீuநீலீமீஸீஸீணீவீ.மீபீu.வீஸீ/sநீலீஷீறீணீக்ஷீsலீவீஜீ/ இல் கிடைக்கின்றன.

சேர்க்கை நடைமுறை மற்றும் தகுதி வரம்பு சேர்க்கைகள் SNUCEE என அழைக்கப்படும் நுழைவுத்தேர்வு மற்றும் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும்

நேர்காணலின் அடிப்படையில், தரம் XII இல் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுடன் சேர்க்கப்ப டும். ஆர்வமுள்ள மாணவர்கள், பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

படிக்க வேண்டும்

spot_img