கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மற்றும் புதுடெல்லி என்.இ.சி கார்பரேஷன் இந்தியா நிறுவனம் இடையே தக்காளியை தாக்கும் முக்கிய நோய்களைக் கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு இயங்கும் தளம் உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதி வாளர் மற்றும் செயல் துணைவேந்தரான முனைவர் கிருட்டிணமூர்த்தி, பயிர் பாதுகாப்பு மைய இயக்குநர் முனைவர் பிரபாகர், ஆராய்ச்சி இயக் குநர் முனைவர். கே.எஸ். சுப்ரமணியன், பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். கா.கார்த்திகேயன் மற்றும் பயிர் நோயியல் உதவி பேராசிரியர் முனைவர். எல். கார்த்திபா ஆகியோர் முன்னிலையில் இருவரும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, அதில் கையெழுத்திட்டனர்



