fbpx
Homeபிற செய்திகள்வீட்டுத் தோட்டம் அமைக்க பயிற்சி

வீட்டுத் தோட்டம் அமைக்க பயிற்சி

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், தங்காடு கிராமத்தில், வேளாண்மை விரிவாக்க சீரமைப்பு திட்டம் (SSEPERS) வேளாண்மை தொழில் நுட்ப வேளாண்மை முகமை (ATMA) திட்டத்தின் மூலம் நேற்று முன்தினம் (ஆக.11) வீட்டு தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைத் தல் பற்றிய பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியில் உபதலை சின்னப்பன், வீட்டுத்தோட்டம், மாடித் தோட்டம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு கூறினார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆர்.சதீஷ், இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வது குறித்து பேசினார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆர்.அஸ்வினி, அட்மா திட்டத்தில் உள்ள பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவு படுத்தினார்.

உதவி தொழில்நுட்ப மேலாளர் சி.என்.ரித்திஷ் குமார் நன்றி கூறினார்.
பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img