fbpx
Homeபிற செய்திகள்விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு வேளாண்மை – உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை விரிவாக்க சீரமைப்புத் திட்டம் சார்பில், விருதுநகர் வட்டார தொழில்நுட்பக் குழு மற்றும் விவசாயிகள் ஆலோசனைக் குழு, உழவன் நண்பர்கள் ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு 40% மானியத்தில், சோலார் மின்வேலி அமைத்தல், 40% மானியத்தில் சூரிய கூடார உலர்த்தல் அமைத்தல், 70% மானியத்தில் சூரிய போர்பம்ப் அமைத்தல், மானிய விலையில் தார்பாலின், ரோட்டவேட்டர், பேட்டரி ஆப்பரேட்டர்ஸ் ப்ரேயர் வாங்குதல் தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அழகாபுரி, தாதம்பட்டி, வள்ளியூர், வலையப்பட்டி, கோல்வர்பட்டி ஆகிய ஊராட்சிகளில் விவசாயிகளுக்கு கடப்பாறை, மண்வெட்டி, அரிவாள் வழங்குதல் ஒவ்வொரு கிராமத்திலும் 200 குடும்பங்களுக்கு 3 தென் னங்கன்றுகள் வழங்குதல் தார்பாலின் வழங்குதல், ஒவ்வொரு கிராமத்திலும் விதவைகள், ஆதரவற்ற பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் திட்டம் போன் றவற்றிற்கும் ஆலோசனை தரப்பட்டது.

சுதாகர், தொமுசராஜ செல்வன், ரவிவர்மா, ராமசந்திரன், முருகபூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img