fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் அரசு ஆதி திராவிடர் நல விடுதியில் ஆட்சியர் மேகநாதரெட்டி ஆய்வு மாணவர்களுடன் தரையில் அமர்ந்து...

விருதுநகர் அரசு ஆதி திராவிடர் நல விடுதியில் ஆட்சியர் மேகநாதரெட்டி ஆய்வு மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உணவு அருந்தினார்

விருதுநகர் அரசு மருத்து வமனை அருகில் உள்ள அரசு ஆதி திராவிடர் நல பள்ளி, முதுகலை கல்லூரி மாணவர்கள் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் சென்று ஆய்வு செய்து, மாணவர்களுடன் கலந்துரையாடி தரையில் அமர்ந்து இரவு உணவு அருந்தினார்.

விருதுநகர் அரசு மருத்துவமனை அரு கில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு ஆதி திராவிடர் நல பள்ளி, முதுகலை கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 48 பள்ளி மாணவர்களும், 21 முதுகலை கல்லூரி மாண வர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த விடுதியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேற்று திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்து, மாணவர்களுடன் தரையில் அமர்ந்து, அவர்களுக்கு விடுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, உணவின் தரம், கழிப்பறை வசதி, மின்சார வசதி ஆகியவை குறித்து கேட்டறிந்தார். ஏதேனும் குறைகள் உள்ள தா என்பதையும் கேட்டு, ஏதேனும் குறைகள் இருந் தால் அதை உடனடியாக சரி செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் உயர் கல்வி பயில்வதற்கும், அவர்களுடைய லட்சியத் தை அடைவதற்கும், அரசு போட்டித் தேர்வை எதிர் கொள்வதற்கும், எதிர்கால வாழ்வை நல்ல முறையில் அமைத்துக் கொள்வதற்கும் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, மாணவர்களுடன் கலந்து ரையாடிக் கொண்டே அவர்களுடன் இரவு உண வினை மாவட்ட ஆட் சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி அருந்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மிகவும் உற் சாகத்துடன் மாவட்ட ஆட்சியருடன் கலந்து கொண்டு, அவர்களுக்கு உயர்கல்வி, அரசு போட்டி தேர்வுகள் குறித்த சந்தே கங்களை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொண்ட னர்.

மேலும் மாணவர்கள் கூறும்பொழுது, மாவட்ட ஆட்சியருடன் கலந்துரை யாடியது, மிகவும் ஊக் கம் அளிப்பதாகவும், வாழ்க்கையில் மாவட்ட ஆட்சியரை போன்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டு வதாகவும், மாவட்ட ஆட்சியருடன் சேர்ந்து உணவருந்தியது இது மிகுந்த சந்தோசத்தை அளித் ததாகவும் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதிதிராவிடர் நல பள்ளிகள், விடுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்ப டுத்தப்பட்டோர், சீர்மர பினர் விடுதிகளில் உள்ள மாணவ, மாண வியரின் நலன் கருதி வழிகாட்டு அலுவலர்கள் (MENTORS) நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகள் மற்றும் விடுதி களை பார்வையிட்டு விடுதிகளுக்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் மற்றும் மாணவ- மாணவியர் கல்வி மேம் பாடு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரா.ஆனந்தி, வட்டாட்சியர் செந்தில் வேலன் மற்றும் மாணவர் கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த தகவலை விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img