விருதுநகரில் உள்ள தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தியாகி சங்கரலிங்கனாரின் 127-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தியாகி சங்கரலிங்கனாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சார் ஆட்சியர் பிரித்திவிராஜ், இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி ஆகியோர் உள்ளனர்.



