fbpx
Homeபிற செய்திகள்விப்ரோ ஜிஇ ஹெல்த்கேரின் சிடி ஸ்கேனர் அறிமுகம்

விப்ரோ ஜிஇ ஹெல்த்கேரின் சிடி ஸ்கேனர் அறிமுகம்

உலகளாவிய மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் தீர்வுகள் கண்டு பிடிப்பாளரான விப்ரோ ஜிஇ (GE) ஹெல்த்கேர், அதன் அடுத்த தலைமுறை ரெவல்யூஷன் ஆஸ்பயர் சிடி (சிஜி -கம்ப்யூட்டட் டோமோகிராபி) ஸ்கேனரை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெவல்யூஷன் ஆஸ் பயர் என்பது ‘ஆத்மநிர்பார் பாரத்’ முன்முயற்சிக்கு இணங்க, புதிதாக அறி முகப்படுத்தப்பட்ட விப்ரோ ஜிஇ மருத்துவ சாதனங்கள் உற்பத்தி ஆலையில், இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, முழு மையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு மேம்பட்ட இமேஜிங் தீர்வாகும்.

இந்த அறிமுகம் குறித்து தலைவர் மற்றும் மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தேவி ஷெட்டி, கூறியதாவது: இந்தியாவில் சுகாதாரத்திற்கான அணுகல் தீவிரமான சமச்சீரற்றதாக உள்ளது மற்றும் புதுமையான மருத்துவ தொழில்நுட்ப தயாரிப்புகள் இந்த இடைவெளியைக் குறைக்க உதவும்.

அதிநவீன, உள்ந £ட்டில் தயாரிக்கப் பட்ட, சந்தையை ஜனநாயகப் படுத்த உதவும் ரெவல் யூஷன் ஆஸ்பயர் சிடி ஸ்கேனர் போன்ற மலிவு விலை தயாரிப்புகள் மூலம் இந்த மாற்றத்தை மேற்கொள்கிறோம்,

பெரிய மற்றும் சிறிய அளவிலான அனைத்து சுகாதார மையங்களுக்கும், தரமான நோயறிதலுக்கான அணுகல் மிகவும் முக் கியமானது.

மேம்படுத்தப்பட்ட நோயாளி பராமரிப்பு விநியோகத்திற்காக இந்த புரட்சிகரமான தயாரிப்பு மூலம் இந் தியாவின் சுகாதார உள் கட்டமைப்பை மேம் படுத்தும் விப்ரோ ஜிஇ ஹெல்த்கேரின் முயற்சியை பாராட்டுகிறேன்” என்றார்.

விப்ரோ ஜிஇ ஹெல்த் கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஷ்ரவன் சுப்ரமணியம் கூறியதாவது: விப்ரோ ஜிஇ ஹெல்த் கேரில் உள்ள நாங்கள் இந்தியாவின் சுயசார்பு இலக்கிற்கு உறுதி பூண்டுள் ளோம்.

ரெவல்யூஷன் ஆஸ்பயர் சிடி அமைப்பு மூலம் குறைவான வச திகளைப் பெற்றுள்ள சந்தைகளை பூர்த்தி செய்வதையும், தரமான சுகாதாரத்திற்கான அணுகல் இடைவெளி யைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண் டுள்ளோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, இந்தியா மற்றும் உலகத்திற்காக மருத்துவ சாதனங்களை தொடர்ந்து முதலீடு செய்வோம் என்றார்.

ஜிஇ ஹெல்த்கேர் இமேஜிங் தலைவர் ஸ்ரீ காந்த் சூர்யநாராயணன் கூறும்போது,
எங்கள் ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்பான ரெவல்யூஷன் ஆஸ்பயர் சிடி ஸ்கேனரை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம்.

இது எங்களின் மிகவும் திறமையான சிடி ஸ்கே னர்களில் ஒன்றாகும் என் றார்.

படிக்க வேண்டும்

spot_img