fbpx
Homeபிற செய்திகள்‘விபத்தில்லா கோவை’: வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

‘விபத்தில்லா கோவை’: வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

கோவை மாநகர காவல் துறை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் உயிர் அமைப்பு இணைந்து விபத்தில்லா கோவை என்ற விழிப்புணர்வை வாகன ஓட்டிகளிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம், உக்கடம், சிந்தாமணி, காந்திபுரம், அண்ணா சிலை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 தினங்களாக வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தியும், விபத்தில்லா கோவையை உருவாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

புதிய காவல் ஆணை யர் ஆக பிரதீப் குமார் பதவி ஏற்றவுடன் நொடிந்து கிடந்த இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், கோயம்புத்தூர் உயிர் அமைப்பு, மாநகர காவல்துறை மற்றும் ரத்னம் கலைக்கல்லூரி மாணவர்கள் இணைந்து அண்ணாசிலை பகுதியில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கியும், சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் சிக்னல் விதிமுறைகளை மதிக்கவேண்டும் என்றும், குறிப்பிட்ட வேகத்தில் வாகனத்தை ஓட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img