fbpx
Homeபிற செய்திகள்விஞ்ஞான அறிவை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை

விஞ்ஞான அறிவை வளர்த்து கொள்ள மாணவர்களுக்கு அறிவுரை

கோவை நவஇந்தியா- ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற் றும் அறிவியல் கல்லூரியின், தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், மாநில அள வில் கல்லூரிகளுக்கு இடையிலான தொழில்நுட்பத் திருவிழா கல்லூரி கலை யரங்கில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.

விழாவிற்கு, ஸ்ரீராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி விழா வைத் தொடங்கி வைத்தார்.

தகவல் தொழில்நுட் பத்துறைத் தலைவர் முனைவர் என்.சுமதி வர வேற்றார்.
சிறப்பு விருந்தினர் கோவை கோட்ட வணிக வரித்துறை இணை ஆணையர் ஆனந்த் மோ கன் பேசியதாவது:

பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து, இது போன்ற தொழில்நுட்பத் திருவிழாக்களை நடத் துவது வரவேற்கத்தக்கது.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களின் திறமை ஓரிடத்தில் குவிக்கப்படும்போது, அனைத்து மாணவர்களும் பயன் அடைவார்கள். நாங்கள் கல்லூரிகளில் படித்த நாட்களில் இது போன்ற நிகழ்ச்சிகளை தன்னார்வலர்களின் ஆதரவுடன் நடத்தி னோம்.

நீங்கள் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு கல்லூரி நிர்வாகமே உதவிக்கரம் நீட்டுவது பாராட்டுதலுக்குரியது. மாணவர்கள் விஞ்ஞானம் குறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ற பக்குவத்தை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பல்வேறு கண்டுபிடிப்புகள் இத்த கைய பண்பு களாலேயே உருவாக்கப்பட்டன. இளம்மனதில் ஒன்றைப் பதியவைக்கும் போது, அது எளிதாக உருவாக்கம் பெறும். இன்று கூகுள் போன்ற தேடுபொறிகள் இணையத்தில் ஏராளம் கிடைக்கின்றன.
அவற்றின் மூலம் மாணவர்கள் தகவல்களை தேடிப்பிடித்து அறிந்து கொள்ள வேண்டும் என் றார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங் களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.

பல்வேறு மாணவ, மாணவிகளுக்கு இடையிலான தொழில் நுட்பப் போட்டிகள் நடை பெற்றன. உதவிப் பேராசிரியர் முனைவர் சம்பத்குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img