fbpx
Homeபிற செய்திகள்வாக்கு எண்ணும் மைய வசதிகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணும் மைய வசதிகள் குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021ஐ முன்னிட்டு, கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாந்தூர் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) இப்ராகிம்ஷா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) சாலமோன், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img