Homeபிற செய்திகள்வளைந்த முதுகுத்தண்டை நேராக்க அறுவை சிகிச்சை: டாக்டர் மேத்தா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

வளைந்த முதுகுத்தண்டை நேராக்க அறுவை சிகிச்சை: டாக்டர் மேத்தா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை

சிறுமியின் வளைந்த முதுகெலும்பை நேராக்க 5 மணி நேரம் வெற்றிகர மாக அறுவை சிகிச்சை செய்தது டாக்டர் மேத்தா மருத்துவமனை மருத்து வர்கள் குழு.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு அவளது சிறு வயதில் முதுகுத்தண்டில் ஏற்பட்ட வளைவு, அதிகரித்துக் கொண்டே வந்தது.

இயல்பாக திரும்பிப் பார்க்கவோ நிமிரவோ முடி யாத நிலை ஏற்பட்டது. தாயை இழந்த அந்த சிறுமியை அவளது அத்தை, சென்னை, சேத்துப்பட்டில் உள்ள டாக்டர் மேத்தா மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணரும் எலும்பியல் துறைத் தலைவருமான டாக்டர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழு பரிசோதித்தது. அவளுக்கு ஸ்கோலியோசிஸ் நோய் இருப்பது தெரிய வந்தது.
ஸ்கோலியோசிஸ் என்பது முதுகுத்தண்டில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒருவித நோய் ஆகும்.

நியூரோமோனிட்டரிங் கருவியைப் பயன்படுத்தி வளைந்த முதுகுத்தண்டை நேராக்க 5 மணி நேரம் சிகிச்சை மேற்கொண்டு அதை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, சிறுமியின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு அவளால் உட்காரவும் நிற்கவும் முடிந்தது.

டாக்டர் பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் கூறுகையில், சிறுமிக்கு செய்த முதுகெலும்பு அறுவை சிகிச்சையில் உள்ள முக்கிய சவால் என்னவென்றால், அவள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாத கார ணத்தால், உடலில் இருந்து அதிக ரத்தம் வெளியேறாமல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

அறுவை சிகிச்சைக்கு முதுகெலும்பில் ஸ்க்ரூக்கள் போடப்பட்டு, பின்னர் முதுகெலும்பை சீரமைத்து அதை நேராக்க கம்பிகள் பயன்படுத்தப்பட்டன என் றார். மருத்துவ இயக்குனர் டாக்டர் கண்ணன் கூறுகையில், முதுகுத்தண்டு பிரச்சினையின் தீவிரத்தை குறைப்பதற்கு, முதலில் அது குறித்து கண்டறிந்து அதற்கான சிகிச்சையை ஆரம்ப நிலையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றார்.

டாக்டர் மேத்தா மருத்துவமனை கடந்த 90 ஆண்டுகளாக 20 லட்சம் நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அறுவை சிகிச்சையில் முன்னோ டியாக திகழ்கிறது என்றார் நிறுவனத் தலைவர் டாக்டர் சரவண குமார்.
இந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான முழு நிதிஉதவியை டாக்டர் மேத்தா மருத்துவமனை ஏற்பாடு செய்தது.

படிக்க வேண்டும்

spot_img