திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் வரைவு வாக்காளர்களின் மறுசீரமைப்பு 2021 பட்டியலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தியதேர்தல் ஆணையம் 1.1.2022ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்குமாறு தெரிவித்துள்ளது.
அதன் முன்பாக 1500க்குமேல் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்த வேண்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1500க்கு மேல் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடி இடமாறுதல் தேவைப்படும் வாக்குச்சாவடிகள் பட்டியல் தயாரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்தாய்வு செய்து அதன் இறுதிப்பட்டியலை நேர்தில் ஆணைய ஒப்புதலுக்கு அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செங்கம் (தனி) 323, திருவண்ணாமலை 296, கீழ்பென்னாத்தூர் 285, கலசபாக்கம் 281, போளூர் 285, ஆரணி 311, செய்யாறு 311, வந்தவாசி (தனி) 280 ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2372 தொகுதிக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 13.09.2021 வரை 8 சட்டமன்ற தொகுதிகளில் 20 லட்சத்து 78 ஆயிரத்து 603 வவாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள் பட்டியலை சரிபார்த்து ஏதேனும் வாக்குச்சாவடி குறித்த தங்களது கருத்துக்கள் ஆட்சேபனை இருப்பின் அதன்விவரத்தினை வருகிற 20ந் தேதிக்குள் சமபந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இந்த காலந்தாய்வு கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியர்கள் வீ.வெற்றிவேல், கவிதா, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



