முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நில சீர்திருத்த ஆணையர்/கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர்/ கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர், சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.