விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ஒ.மேட்டுப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ரூபாய் 50,00,000/- மதிப்பீட்டில் ராம்கோ நிறுவனம் சார்பில் கட்டிமுடிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, ஊராட்சி மன்றத்தலைவர் மாதவராவ் ஆகியோர் முன்னிலையில், காவல்துறை தலைவர் (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை) தினகரன் திறந்து வைத்தார்.
உடன் ராம்கோ சிமெண்ட்ஸ் உபதலைவர் (உற்பத்தி) ராமலிங்கம், பொது மேலாளர் மணிகண்டன், துணை பொது மேலாளர் ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், ராம்சங்கர் ஆகியோர் உள்ளனர்.



