Homeபிற செய்திகள்ராமேஸ்வரம் வடகாட்டில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்: எஸ்.பி...

ராமேஸ்வரம் வடகாட்டில் பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் இரண்டு குற்றவாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்: எஸ்.பி கார்த்திக் தகவல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேயுள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவரின் மனைவி சந்திரா கடந்த 24.05.2022 ஆம் தேதி காலை 8.00 மணியளவில் கடல் பாசி சேகரிக்க சென்ற அவர் தினமும் வீடு திரும்பும் நேரமான மாலை 5.00 மணிக்கு வீட்டிற்கு வராததால் கிராம மக்கள் சேர்ந்து தேடிப்பார்த்ததில் வடகாடு கிராமத்திற்கு செல்லும் வழியில் நரிக்குழிக்கு போகும் பாதையில் வாலாந்தரவையைச் சேர்ந்த செய்யது மற்றும் பஷீர் அவர்களுக்கு சொந்தமான இறால் பண்ணைக்கு அருகில் அரை குறை ஆடையுடன் கைகள் மற்றும் முகம் கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்தேறியதை பார்த்த உடன் ஒடிசா மாநில இளைஞர்கள் மீது சந்தேகம் அடைந்து இறால் பண்ணைக்குள் நுழைந்து அங்கிருந்த ஒடிசா மாநில இளைஞர்களை தாக்கியும்,பொருள்களுக்கு தீயும் வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணையில் இறங்கிய காவல்துறை 6 இளைஞர்களை விசாரித்ததின் பெயரில் இறந்த பெண்ணின் கணவர் பாலு கொடுத்த புகாரின் பேரில் குற்ற எண்ணான 158/2022 வழக்குப்பதிவு செய்து பிரிவு 376,302 ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் தாக்குதலுக்கு பாதிப்புக்குள்ளான ஒடிசா மாநில இளைஞர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 26.05.2022 அன்று சிகிச்சை முடிந்து வந்தவர்களான 1)பிரகாஷ் (22)
2)ரஞ்சன் ராணா (34)
3) விகாஷ் (24)
4) பிரசாத் (18)
5) ராகேஷ் ராணா (20)
6) சந்தீப் சேதி (23)
ஆகியோரை விசாரணை செய்ததில் இறால் பண்ணையில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் செய்யது இப்ராகிம் வடமாநிலத்தவர்களுக்கு பொருள் வாங்கி கொடுத்து உதவி செய்யும் ராமர்பாதத்தை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை விசாரணை செய்ததில் பிரகாஷ் (22) மற்றும் ரஞ்சன்ராணா (34) ஆகிய இருவரும் பாசி சேகரிக்க சென்ற வடகாடு பாலு என்பவரின் மனைவி சந்திராவை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததும் கொலை செய்தும் அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்று உள்ளார்கள் என்பது விசாரணையின் மூலம் தெரியவந்ததால் இருவரையும் கைது செய்து அந்த நபர்களிடமிருந்து இறந்துபோன சந்திராவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட 3 தங்க காசுகள், 1 அம்மன் படம் போட்ட தாலியும், ஒரு வெள்ளி மெட்டி மற்றும் மெட்டிக்கான பித்தளை வளையம் ஒன்றும் ஆகிய பொருள்கள் சாட்சிகள் முன்பாக கைப்பற்றப்பட்டது.

மேலும் குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை சம்பந்தமாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img