Homeபிற செய்திகள்ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரோட்டரி கிளப் ஆப் மேட்டுப்பாளையம் பிரைம், மேட்டுப்பாளையம் பிரைம் மற்றும் வாரியர்ஸ் டென் உடற்பயிற்சி கூடம், அரசு மருத்துவமனை ஆகியவை சார்பில் ரத்ததான முகாம், வாரியர்ஸ் டென் உடற்பயிற்சி கூடத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நடந்தது. ரோட்டரி பிரைம் சங்கத் தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஸ்ரீஜவஹர் வரவேற்றார்.

முகாமை டாக்டர் சுகன்யா அரவிந்த் துவக்கி வைத்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை டாக்டர் சரவணன் தலைமையில் செவிலியர் கீதா ரத்த பரிசோதகர் ரஞ்சித், ஐசிடிசிஐ சம்பத்குமார், உதவியாளர் அண்ணாதுரை ஆகியோர் ரத்ததானம் பெற்றனர்.

ரோட்டரி சங்கச் செயலாளர் ராஜு, பொருளாளர் அபுதாகீர், டாக்டர் சங்கீதா, உறுப்பினர்கள் அஸ்வின், யுவராஜ், கலைச்செல்வி, கோகுல், ஆகாஷ், ரஞ்சித்உட்படபலர்கலந்துகொண்டனர்.ஹர்ஷவர்தன் நன்றி கூறினார். முகாமில் சுமார் 35 யூனிட் ரத்தம் பெறப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img