Homeபிற செய்திகள்ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழங்கள் கோவையில் பறிமுதல்

ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழங்கள் கோவையில் பறிமுதல்

தமிழகத்தில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கோவை உக்கடம், டவுன் ஹால் பகுதியிலுள்ள கிடங்குகளில் பழுக்க வைக்கப்பட்டு சுற்று பகுதியி லுள்ள கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. மாம்பழங்களை விரைவாக பழுக்க வைப்பதற்கு கார்பைடு, எத்திலீன் ரசாயன பவுடர் ஆகிய வற்றை பயன் படுத்து வதை வியாபாரிகள் வாடிக்கையாக கொண்டுள் ளனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சியில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கு.தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 6 குழுவினர் டவுன்ஹால், வைசியாள் வீதி, பவளம் வீதி&1. பவளம் வீதி&2, கருப்பண்ண கவுண்டர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் நேற்று ஆய்வு செய்தனர்.

இதில் 45 கடைகளில் ரசாயன எத்திலீன் பவுடர் பயன்படுத்தி பழுக்க வைத்திருந்த 12 டன் 350 கிலோ மாம் பழங்கள், 2 டன் 350 கிலோ சாத்துக்குடிகள் என மொத்தம் 14 டன் 700 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர். இதன்மதிப்பு ரூ.8.10 லட்சம் என்று உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 14 டன் பழங்களும் மாநகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. முறையற்ற வகையில் பழங்களை பழுக்க வைத்த 12 பேருக்கு உணவு பாதுகாப்பு துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img