கோவை பெதஸ்தா பிரார்த்தனை மையம் எதிரே உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கத்தில் இயேசு அழைக்கிறார் சிறப்பு ஆசீர்வாத பிரார்த்தனைக் கூட்டம் வரும் மே 8-ம் தேதி பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இயேசு அழைக்கிறார் நிறுவனரும், காருண்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பால் தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன் மற்றும் குடும்பத்தினர் அருளுரை வழங்கி, சிறப்பு பிரார்த்தனை செய்கிறார் கள்.
வாழ்வின் விஷேசித்த தேவைகளுக்காகவும், நல் வாழ்விற்காகவும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படும். தேர்வு எழுதும் மாணவ, மாணவிய ருக்கு சிறந்த மதிப்பெண்கள் பெற பிரார்த்தனை செய்யப்படும். மாணவ, மாணவிகளின் சிறப்பு பாடல்களும் இடம் பெறும்.
இக்கூட்டத்தில் ஜாதி, மத வேறுபாட்டிற்கு அப்பாற்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வசதியாக மேட்டுப்பாளையம்-சிவரஞ்சனி தியேட்டர், மதுக்கரை-மரப்பாலம், சித்ரா-பஸ் நிறுத்தம், சரவணம்பட்டி-கஸ்தூரி சூப்பர் மார்க்கெட், பாப்பம்பட்டி-ஜங்ஷன், பொங்கலூர்-கஸ்தூரி ஸ்கூல், தொட்டிபாளையம்-அரசுப்பள்ளி, பெதப் பம்பட்டி -பஸ் நிறுத்தம், கொடுவாய்-சக்தி விநாயகம் புதூர், பொன்னாவரம்-அரசு மருத்துவமனை, தொட்டித்துறை-பஸ் நிறுத்த ம் ஆகிய பகுதிகளில் இருந்து மதியம் 12 மணிக்கு சிறப்பு பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து காருண்யா நகர் செல்வதற்கும், கூட்ட முடிவில் திரும்பி செல்வதற் கும் பேருந்து வசதிகள் அதிகாலையில் இருந்து இரவு வரை ஒழுங்கு செய் யப்பட்டுள்ளன.
சிற்றுண்டி சாலைகள், புத்தக சாலைகள் ஆகிய வசதிகள் கூட்ட அரங்கிற் குள் இடம் பெறும். காரு ண்யா மாணவர் சேர்க்கை பற்றி அறிய ஸ்டால்களும் உண்டு.இக்கூட்டத்தில் டாக்டர் ஸ்டெல்லா தினகரன், சாமுவேல் பால் தினகரன், டாக்டர் ஷில்பா சாமுவேல், ஸ்டெல்லா ரமோலா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடு களை ஸ்டீபன் பிரபு செய்து வருகிறார்.
இத்தகவலை செய்தி தொடர்பாளர் ஜெ.ஜெபசிங் தெரிவித்துள்ளார்.



