மேட்டுப்பாளையத்தில் புதிய ரோட்டரி சங்கம் உதயமாகி உள்ளது. தன்னார்வலர்கள் இனணந்து “ரோட்டரி கிளப் மேட்டுப்பாளையம் பிரைம் “என்ற சங்கத்தினை அமைத்துள்ளனர்.
இதன் பட்டய தலைவராக மருத்துவர் அரவிந்த் கார்த்தி கேயன் (2021-2022) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமுதாய நலனில் அக்கறை கொண்ட யாவரும் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து ரோட்டரி மூலம் சேவை செய்ய முன் வருமாறு புதிய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



