முதல்வர் மு.க.ஸ்டா லின், அக்டோபர் மாதம் 21 -ம் தேதி எழுதிய கடிதத்தினை தொடர்ந்து ஒன்றிய அரசு 90,000 மெ. டன் யூரியாவை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற் சமயம் நிலவி வரும் சாதகமான பருவமழை காரணமாக 13.747 லட்சம் எக்டரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டதில், இதுநாள் வரை 7.816 லட்சம் எக்டர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு சம்பா (ராபி) பருவத்தில் நெல் மற்றும் இதர பயிர்களான சிறுதா னியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றின் சாகுபடி ஒட்டுமொத்தமாக 24.829 லட்சம் எக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக யூரியா மற்றும் டிஏபி உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. ஒன்றிய அரசு, அக்டோ பர் மாதத்திற்கு யூரியா, டிஏபி மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 1,43,500 மெ.டன், 4,480 மெ.டன் மற்றும் 8,140 மெ. டன் ஒதுக்கீடு செய்தது.
யூரியா 1,43,500 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இது நாள் வரை உர உற்பத்தி நிறுவனங்களால் 77,863 மெ.டன் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத் தில் ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின்படி 63,000 மெ. டன் இறக்குமதி யூரியா தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டியுள்ளது.
டிஏபி 45,150 மெ. டன் உரத்தேவைக்கு 4,480 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், இதுநாள் வரை 11,781 மெ.டன் டிஏபி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று பொட்டாஷ் உரத்தின் அக்டோபர் மாத உரத்தேவை 31,700 மெ. டன்னிற்கு பொட்டாஷ் 8,140 மெ. டன் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இது நாள்வரை 14,456 மெ. டன் பொட்டாஷ் உரம் வழங்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில் விவசாய பணிகளுக்கு தட் டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க வழி செய்திடவும், தமிழ்நாட்டில் உரத்தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு விவசாய பெருங்குடி மக்களின் நலனை பாதுகாத்திடும் பொருட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சருக்கு 21.10.2021 அன்று யூரியாவினை உரித்த காலத்தே வழங்கிடவும், 20,000 மெ.டன் டிஏபி மற்றும் 10,000 மெ.டன் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக ஒதுக்கீடு செய்து குறைவின்றி வழங்குமாறு கடிதம் எழுதினார்.
இதன் காரணமாக காரைக்கால் துறைமுகத் திற்கு வரவுள்ள 90,000 மெ.டன் இறக்குமதி யூரியா வினை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
உள்ளூர் உர தயாரிப்பு நிறுவனங்களான ஸ்பிக் நிறுவனம் இது நாள் வரை 25,212 மெ.டன் யூரியாவினை வழங்கியுள்ளது. எம்எப்எல் உர நிறுவனம் இது நாள் வரை 26,185 மெ. டன் யூரி யாவினை வழங்கியுள்ளது.
இம்மாத இறுதிக்குள் ஸ்பிக் நிறுவனம் 10,000 மெ.டன் மற்றும் எம்எப்எல் உர நிறுவனம் 8,000 மெ.டன் யூரியாவினை வழங்கிட திட்டமிட்டுள்ளன. காரைக்கால் துறைமுகத்தில் தற்சமயம் இருப்பில் உள்ள 4,000 மெ.டன் யூரியா ரயில் மார்க்க மாக தேவைப்படும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமும் மாநில மற்றும் மாவட்ட அளவில் உர இருப்பு மற்றும் நகர்வு பணிகள் மாவட்ட வாரியாக ஆய்வு செய்யப்பட்டு தேவைப்படும் மாவட்டங்களுக்கு உரங்களை அனுப்பிட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



