fbpx
Homeபிற செய்திகள்மின்சார வாரியம் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது பாஜக சிறுபான்மை அணி தேசியச்...

மின்சார வாரியம் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் பேட்டி

பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராகிம் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கம் பகுதி அருகே உள்ள தியாகி சிவராம் நகர் பகுதியில் கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் பிரச்சனை உள்ளது. இப்பிரச்சனைக்கு உட னடி தீர்வு தேவை. இப்பிரச்சனை சரி செய்யப்படாவிட்டால் மாநகராட்சி முற்றுகையிடப்படும்.

ஏழை இஸ்லாமிய குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிப்பதற் கான உதவியை கோவை மாவட்ட பாஜக செய்துள்ளது. தொடர்ந்து இஸ்லாமியர்களின் வாழ் வாதாரத்தைக் காப்பதற்கான அனைத்து நடவ டிக்கையையும் பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது.

கோவிலில் உள்ள தங்க நகைகளை விற் கும் திட்டத்தால் பல்வேறு ஊழல்கள் நடை பெற வாய்ப்புள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலில் திமுக அரசாங்கம் ஈடுபடுகிறது.

மின்சார வாரியம் குறித்து மாநிலத் தலைவர்‌ அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாதவை அல்ல. ஆதாரம் இல்லாமல் ஒரு போதும் பாஜக எந்த குற்றச்சாட்டையும் முன் வைப்பதில்லை
இவ்லாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பாஜக அரசு செய்தி தொடர்பு தலைமை நிர்வாகி கணபதி ஜான்சன் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img