fbpx
Homeபிற செய்திகள்மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கிரிக்கெட் போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கிரிக்கெட் போட்டி

இந்திய பாரா விளை யாட்டு வீரர்களை கவு ரவிக்கும் வகையில் மாற் றுத்திறனாளி களுக்கான அமர்வு கிரிக்கெட் போட்டி, ஈரோட்டில் நடைபெற்றது.

ஜான்சன் நினைவு கோப் பைக்கான போட்டியில், ஈரோடு வாரியர்ஸ் மற்றும் திருநெல்வேலி சூப்பர் கிங்ஸ் அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் மைதானத்தில் நடை பெற்றன.

போட்டியை முதன்மை விருந்தினர்கள் ஷாஜி புல் சாய் அகாடமி மது கிருஷ்ணன், அன்பு, தேவகாந்தன், செல்வராஜ், அருள் முருகன், லோகநாதன், சாருலதாசுந்தர், ஜீவா, தினேஷ், டாக்டர் சத்தியா, நந்தகுமார், நாகராஜ், மாணிக்கம், பிரியதர்ஷினி, அரவிந்தன், கார்த்தி, ராஜவர்மன், டாக்டர் அருண் பிரசன்னா, கண்ணன், சிவானந்தன், மனோஜ்குமார், சைவ சித்தாந்தம் அமைப்பாளர் வெங்கடாசலம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

மூன்று சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் ஈரோடு வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதில் சிறந்த பேட்ஸ்மே னாக கோவிந்த் மற்றும் சிறந்த பவுலராக ஜாஹிர் தேர்வு ஆனார்கள்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினர் முன்னாள் அரசு வழக்கறிஞர் டாக்டர் ராஜா, விவேகானந்தன், மணி மேகலை, டாக்டர் மூர்த்தி, ஜான்சன் குடும்பத்தை சேர்ந்தவர்கள், ஹரிஹரன், ஸ்ரீதர், சதீஷ், பிரமோத், மோகன்ராஜ், சந்தோஷ், ஜான், வேலு,பழனிவேல், சக்திவேல், பிரதீப், செல்வம், கோபிநாத், மணி, டாக்டர் ஜெகதீசன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img