கோவை மாநகராட்சி புதிய துணை ஆணையராக விமல்ராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை மாநகராட்சி துணை ஆணையராகப் பணியாற்றி வந்த மதுராந்தகி, திருப்பூர் மாவட்ட வருவாய் (நில எடுப்பு) அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட வருவாய் (நில எடுப்பு) அதிகாரியாகப் பணியாற்றி வந்த விமல்ராஜ், கோவை மாநகராட்சி துணை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் துணை ஆணையராக விமல்ராஜ், புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு செட்டியார்பட்டி பேரூராட்சியில் எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை