மேட்டுப்பாளையம் வட்டம் பெரியபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ். சமீரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை நேரில் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



