fbpx
Homeபிற செய்திகள்மதுப்பெட்டிக்குள் இருந்த பாம்பு: ‘ஷாக்‘ ஆன டாஸ்மாக் ஊழியர்கள்

மதுப்பெட்டிக்குள் இருந்த பாம்பு: ‘ஷாக்‘ ஆன டாஸ்மாக் ஊழியர்கள்

கோவையில் மதுபான கடை ஒன்றிற்கு வந்த மதுபெட்டிக்குள் பாம்பு இருந்ததை பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

கோவை சரவணம்பட்டி அருகே ப்ரோசோன் என்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் ‘எலைட்’ மது விற்பனையகம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த விற்பனையகத்திற்கு ‘பீர்’ மது வகைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு பெட்டியை திறந்த போது அதனுள் சுமார் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இருந்தது.

இதனை பார்த்த டாஸ்மாக் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து அந்த பாம்பை பிடித்த ஊழியர்கள் அதனை அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img