‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், கோவை மாவட் டத்தில் ஆனைமலை வட்டாரத்தில் உள்ள 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10-ம் தேதி வரை 4284 பேர், மாநகராட்சியில் 5 நகர்ப்புற ஆரசு ஆரம்ப சுகா தார நிலையங்களில் 3238 பேர் என மொத்தம் 7522 பேர் பயனடைந்துள்ளார்கள்.
மக்கள் நல்வாழ்வு என்பது ஒரு சமுதாயத்தின் அனைத்து வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு ஆரோக்கியமான மக்களால் மட்டுமே ஆக்கப்பூர்வமான பங்கினை அளிக்க இயலும்.
தரமான மருத்துவ வசதி களைப் பொது மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்வதில் மட்டும் கவ னம் செலுத்தாமல், நோய் தடுப்பு பணிகளிலும் நல்ல வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிப்பதிலும் கவனம் செலுத்தி, நலமான சமு தாயத்தை உருவாக்க பல்வேறு நலத் திட்டங்களை, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் இதய நோய், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சுகாதாரத்துறையின் வாயிலாக கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலம், அனைத்து கிராம பகுதிகளிலும் மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தடையில்லா மருந்து
நீரிழிவு, இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு காலத்தில் இவர்களால் அரசு மருத்துவமனைக்கு சென்று மருந்துகளை வாங்க முடிவதில்லை.
இதனால் அவர்களுக்கு நீரிழிவும், ரத்த அழுத்தமும் சீராக இருப்பதில்லை. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே, இவர்களுக்கு தடையில்லா மருந்துகளை வழங்கு வதற்காகவே, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.
முதல்வர் 05.08.2021 அன்று ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக, கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தில் தொடங்கி வைத்தார்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் மூலம், 45 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்குதல், நோய் ஆதரவு சேவைகள், இயன் முறை மருத்துவச் சேவைகள், சிறுநீரக நோயாளிகளைப் பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவச் சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகளைக் கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்குத் தேவையான அனைத்து சுகாதாரத் தேவைகளையும் வழங்கு வதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்’ கீழ் ஆனைமலை வட்டாரத்தில் உள்ள 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் 10.09.2021 அன்று வரை 4284 பயனாளிகளும், மாநகராட்சி யில் 5 நகர்ப்புற ஆரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட் டுள்ளதன் மூலம் 3238 பேர் பயனடைந்துள்ளார்கள்.
கோவை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் விபரம்:
உயர் இரத்த அழுத்தம்: 3814
நீரிழிவு நோய்: 1456
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்: 1741
இயன்முறை சிகிச்சை: 268
செயல்முறை சிகிச்சை: 243
சமுதாய நலப் பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளி பற்றிய குறிப்பையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள், இடைநிலைச் சுகாதாரச் சேவையாளர்கள், இயன் முறை மருத்துவர்கள்,
நோய் ஆதரவுச் செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது சுகாதாரத் துறையின் களப்பணியாளர்களுக்கு மக்களைத் தேடி நேரடியாக சென்று மருத்துவ சேவையினை வழங்க வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் எளிதில் சென்று மருத்துவ சேவை வழங்க முடியும்.
படுக்கையிலேயே இரண்டரை ஆண்டு
பயனாளி செல்வரத்தினம்: நான் காளியாபுரத்தில் வசித்து வருகிறேன். என் அம்மா ராஜேஸ்வரிக்கு 91 வயது ஆகிறது. எனது அம்மா கடந்த இரண்டரை வருடங்களாக படுத்த படுக்கையாக உள்ளார்.
அம்மாவால் நடக்க இயலாததால் அவர்களால் கழிவறைக்கு சென்று வரமுடியாது. இதனால் சிறுநீர்குழாய் பொருத்தி உள்ளோம். தனியார் மருத்துவமனைக்கு சென்று இக்குழாய் பொருத்தி வருவது மிகவும் சிரமமாக இருந்தது.
இதற்காக அதிக பணம் செலவழிக்க வேண்டி இருந்தது. தற் போது முதல்வர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தின் மூலம் இயன்முறை மருத்துவர், செவி லியர் எங்கள் வீட்டிற்கே வந்து எனது அம்மாவிற்கு சிகிச்சை அளிப்பதுடன், சிறுநீர்க் குழாய் மாற்றித் தருகிறார்கள்.
சுகாதாரம், உணவு முறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்கள். இதனால் என் அம்மாவை மருத்துவமனை கொண்டு செல்லும் அலைச்சல் இல்லாமல் அவர்களுக்கு சிறந்த முறையில் வீட்டிலே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தை வழங்கிய முதல்வருக்கு மனமார்ந்த நன்றியினை நானும் எனது குடும்பத்தாரும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உடல் நலத்தில் அக்கறை
பயனாளி பூதேவி: நான் காளியப்பன் கவுண்டன் புதூரில் வசித்து வருகிறேன். நான் உயர் இரத்த அழுத்த நோய்க்கு கடந்த 10 வருடங்களாக மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.எங்கள் ஊர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யதில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவது மிகவும் சிரமமாக இருந்தது. மேலும் வயதானதால் என்னால் அடிக்கடி பரிசோத னைக்காக சென்று வருவது கடினமாக இருந்தது.
இந்நிலையில், முதல்வரால் தொடங்கப்பட்ட ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ், எங்கள் வீடு தேடி சுகாதாரத் துறையினர் வந்து இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
என் போன்ற ஏழைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்ட மாகும். எங்கள் உடல்நலத்தின் மீது அக்கறை கொண்டு இத்திட்டத்தை கொண்டுவந்த முதல்வருக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், கோயம்புத்தூர்



