கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களில் 31.03.2021ல் நிலுவையிலுள்ள கடன்களை தமிழக அரசு தள்ளுபடி செய்து ஆணை பிறப்பித்துள்ளது.
2021-2022ம் ஆண்டிற்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் சுய உதவிக்குழு கடன்கள் வழங் கிட ஆண்டுக் குறியீடாக கோவை மாவட்டத்திற்கு ரூ.60/- கோடி அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் கடன் கள் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழக அரசு அதிகபட்ச கடன் அளவினை ரூ.10/- லட் சத்திலிருந்து ரூ.12/- லட்சமாக உயர்த்தி ஆணை வழங்கியுள்ளது.
இவ்வாய்ப்பினைப் பயன் படுத்தி மகளிர் சுய உதவிக்குழுக்கள் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ள உடன் அருகில் உள்ள கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகளை அணுகி கடன்பெற்று பயன்பெறலாம்.
ரூ.10 லட்சம் வரையிலான அளவிற்கு நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி கடன் பெற்று பயன் அடையலாம்.
மேலும் இதுவரை கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினர்களாக இல்லாத் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உடன் கூட்டுறவு நிறுவனங்களில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டு, அதிகபட்ச கடன் வரம்பான ரூ.12/- லட்சம் வரை பெற்று பயன்பெறவும் விரைவில் அறிவிக்கப்படவுள்ள வட்டிச் சலுகையினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.



