Homeபிற செய்திகள்பொதுமக்களுக்கான அரசு சேவைகள்: ஓமலூர் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

பொதுமக்களுக்கான அரசு சேவைகள்: ஓமலூர் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

சேலம் மாவட்டம், கருப்பூர், வெள்ளாளப்பட்டியில் பொதுமக் களுக்கான அரசின் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செ.கார் மேகம் ஆய்வு செய்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பல்வேறு மக்கள் நலத்திட்டங் களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் மற்றும் சேவை கள் அனைத்தும் முறையாக பொதுமக் களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன.

இ-சேவை மையங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்கள், அரசு கேபிள் டிவி நிறுவனம் உள்ளிட்ட 470 இடங்களில் இயங்கி வருகின்றன.

இந்த இ-சேவை மையங்களில் பிறப்புச் சான்று, முதல் பட்டதாரிக்கான சான்று, விவசாயச் சான்று, வருமானச் சான்று, வாரிசுச் சான்று, சொத்து மதிப்பு சான்று, கலப்புத் திருமணச் சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதிய திட்டம், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான சான்று, இறப்புச் சான்று உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சேவைகளை ஒரே இடத்தில் இ-சேவை மையம் மூலமாக பொதுமக்கள் பெற்று பயனடையலாம்.

சேலம் மாவட்டத்தில் பகுதி நேர மற்றும் முழு நேர நியாயவிலைக்கடை கள் என 1601 நியாயவிலைக் கடைகள் இயங்குகின்றன. பெரும்பாலான பொதுமக்கள் நியாயவிலைக்கடைகள் மூலமே அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப் பாக நியாயவிலைக்கடைகளில் வழங் கப்படும் அனைத்து பொருட் களும் தரமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத் தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெள்ளாளப்பட்டி கூட்டுறவு நியாயவிலைக்கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கான சேவை வழங்குவதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முக்கிய பங்காற்றுகிறது.

சேலம் மாவட் டத்தில் 107 அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், 11 அரசு மருத்து வமனைகள், மேட்டூரில் 1 தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு தடுப்பூசிகள், காய்ச்சல் பரிசோதனைகள், பிரசவம், அவசர சிகிச்சை, தொழுநோய், காச நோய், எச்.ஐ.வி.பரிசோதனைகள், பிறப்பு, இறப்பு பதிவேடு, சித்தா பிரிவு உள்ளிட்ட அனைத்துவித மருத்துவ சேவைகளும் வழங்கப் பட்டு வருகின்றன.

இங்கிருந்து தேவைக்கேற்ப மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கும் நோயாளிகள் பரிந் துரைக்கப் படுகின்றனர்.

கருப்பூர், ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டு மருந்து, மாத்திரைகளின் இருப்புகள், பிறப்பு சான்றுக்கான பதிவேடுகள், வெளிநோயாளிகளின் வருகை குறித்த பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன.

குறிப் பாக நாய்க்கடி, பாம்புக்கடி உள் ளிட்ட விஷ முறிவு மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தொடர்புடைய அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்தார். ஆய்வின்போது, ஓமலூர் வருவாய் வட்டாட்சியர் வள்ள முனியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img