fbpx
Homeபிற செய்திகள்பேச்சுப் போட்டியில் ஈரோடு மாணவி வெற்றி

பேச்சுப் போட்டியில் ஈரோடு மாணவி வெற்றி

திருச்சங்கோடு கே.எஸ்ஆர் கலைஅறிவியல் கல்லூரியில் ‘டாக்கத்தான்”; என்ற மாநில அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் சார்பாக 11- ஆம் வகுப்பு மாணவி சௌபர்ணிகா கலந்துகொண்டு ‘சுதந்திர இந்தியாவின் நம்பமுடியாத பெண்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து 7 நிமிடங்கள் உரை யாற்றி முதல் பரிசும், ருபாய் 15,000 பரிசுத் தொகையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றிபெற்ற மாணவியையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளியின் தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி, தாளாளர். எஸ்.டி.சந்திரசேகர், சி.பாலசுப்ரமணியம், முதன்மை முதல்வர் நல்லப்பன், பள்ளியின் ஆலோசகர் எஸ்.பிரேமலதா, முதல் வர் வி.பிரியதர்சினி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img