கோவை சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற செந்தலை ந.கவுதமன், முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது பெற்ற கலைப் பித்தன் ஆகியோருக்கு பாராட்டு சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன் தலைமையில் நடை பெற்றது.
சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது: சூலூருக்கும் சுயம ரியாதை கொள்கைகளுக்கும் நெருங் கிய தொடர்பு உண்டு. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை பெரியார் ஒருபோதும் அவ மரியாதை செய்தது இல்லை.
குன்றக்குடி அடிகளார் இருக்கை யில் அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் பெரியார். ஆதிக்க சக்திகளையும், பிராமணீ யத்தையும் தான் அவர் வெறுத் தார். பிராமணர்களை என்றும் வெறுக்கவில்லை.
காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் கோவிலுக்கு வந்த போது தி.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதை அறிந்து, அவர் களுக்கு அறிவுரை கூறி காஞ்சிப் பெரியவருக்கு பாதுகாப்பு கொடுத்தார்.
பிறர் உணர்வுகளை மதித்தவர். ஆனால் இப்பொழுது அந்தஉணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. பெரியார் இட்ட விதைதான் இன்று சமூகத்தில் தாழ்த் தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பலர் உயர் பதவிகளில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அரசு விருது பெற்ற செந்தலை கவுதமன், கலைப்பித்தன் ஆகியோர் இதுவரை சைக்கிளில் செல்வதை அறிந்த நடிகர் சிவகுமார், தனது மகன்களும் நடிகர்களுமான சூர்யா, கார்த்தி ஆகியோரிடம் தெரி வித்து இருவருக்கும் இரு சக்கர வாகனங்களை வாங்கி பரிசளித்தார்.
விழாவில் சூலூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் பொன்முடி, முருகநாதன், திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் மன்னவன், பசுமை நிழல் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் விஜயகுமார், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்



