கோவை புலிய குளம் புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர்படை சார்பாக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.
யோகா தின விழாவில் துணைத்தாளாளர் அருட்பணி ஞானப்பிரகாசம், தலைமையாசியை அமலோற்பவ மேரி, ஆசிரியர்கள் இருதய ராஜேந்திரன், ஏசுதாஸ் ஆகியோர் மாணவர்களிடம் யோகா செய்வதால் ஏற்படும் நலன்கள் குறித்து எடுத்துரைத்தனர். பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் யோகா பயிற்சி அளித்தார்.
உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது.
இன்று மாணவர்கள் மூச்சு பயிற்சி, யோகமுத்ரா, நமஸ்காராசனம், பத்மாசனம், லோலாசனம், பர்வததாசனம், வஜ்ராசனம், சஷங்காசனம், வக்ராசனம், கோமுகாசனம், பச்சிமுத்தாசனம், குக்குடாசனம், தனூர்ஆசனம், புஜங்காசனம், சலபாசனம், வீராசனம், நின்றபாத ஆசனம் போன்ற ஆசனங்களை மாணவர்கள் செய்தார்கள். யோகா தினத்தை சிறப்பிக்க எல்லா ஏற்பாடுகளையும் தேசிய மாணவர் படை அலுவலர் ஆல்பர்ட் அலெக்சாண்டர் செய்திருந்தார்.



