19 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்கும் பிக்பாஷ் ஜூனியர் பேட்மின்டன் லீக் போட்டிகள் கோவை கொடிசியா அரங்கில் 10ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
13 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக தளம் அமைத்து நடைபெற உள்ள போட்டிகளில் 8 அணிகளைச் சேர்ந்த 80 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாடு பேட்மின்டன் அசோசியேசன், கோவை பேட்மின்டன் அசோசியேசன் மற்றும் வீஎக்ஸ்போ இந்தியா இணைந்து நடத்த உள்ள இப்போட்டிக்கான வீரர்கள் ஏலத்திற்கான நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் காஞ்சி ஸ்பார்க் ஏசஸ், தஞ்சை தலைவாஸ், செட்டிநாடு சாம்பியன்ஸ், திருப்பூர் வாரியர்ஸ், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், ராக்ஃபோர்ட் ராக்கர்ஸ், திருவள்ளூர் வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
உழவர் பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் 500 பார்வையாளர்கள் இப்போட்டியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் சர்வதேச தரநிலைகளுக்கான ஜூனியர் பேட்மிண்டன் போட்டி இது என்பது குறிப்பிடதக்கது.