பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாநகர மாவட்ட பாஜக இளைஞரணி, ஜிகேஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டியை அரசு தொடர்புப் பிரிவு மாவட்டச் செயலாளர் கணபதி ஜான்சன் துவக்கி வைத்தார்.
இதில் 25 அணிகள் பங்கேற்றுள்ளன. மூத்த நிர்வாகி ஜிஎம் சுப்பையன், மாவட்டச் செயலாளர் பூவை தங்கம், இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் நவீன்குமார், மண்டலச் செயலாளர் பாலு, மண்டல இளைஞர் அணித் தலைவர் சரத், அமைப்பு சாரா ராகவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



