பல்கலைக்கழக அளவிலான தேர்வில் முதலிடம் பிடித்த தர்மபுரி ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவி ஜி.கலையரசிக்கு பாராட்டு விழா, கல்லூரி அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.
கல்லூரி துணை சேர்மன் மருத்துவர் அசோக் குமார், கல்லூரி சேர்மன் மருத்துவர் மதி.மோகனாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர் புவனேஸ்வரன் ஆகியோர் அவர்கள் கலந்துகொண்டு 2020 -2021ம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அள விலான தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிப் பேசினர்.
சாதனை மாணவியைப் பாராட்டும் வகையில் அந்தத் துறை சார்பாக பேராசிரியர்கள் மகேஸ்வரி, ரஞ்சிதா, முனைவர் பொன்னம்பலம் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
மாணவி கலையரசிக்கு அவர் படிக்கும் துறையில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து கேக் வெட்டி நினைவுப் பரிசுகள் வழங்கினர்.
மாணவி கலையரசி பத்திரிகையா ளர்களிடம் கூறுகையில், நான் இந்தத் துறையை தேர்ந்தெடுத்ததன் நோக்கம், ஏழை - எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். சின்ன வயதில் இருந்து எனக்கு மருத்துவத்துறை ரொம்ப பிடித்தமான துறை என்று தெரிவித்தார்.
இறுதியாக மாணவி ஜி.கலை யரசிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பதக்கம் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக அலுவலர் ஜோதிபாசு, மக்கள் தொடர்பு அலு வலர் லாவண்யா ஆகியோர் நன்றி கூறினர்.



