Homeபிற செய்திகள்‘நோஷார்ட்கட்ஸ்’ பிரெஷ் டூ ஹோம் புதிய விளம்பரப் படத்தில் ரன்வீர் சிங்

‘நோஷார்ட்கட்ஸ்’ பிரெஷ் டூ ஹோம் புதிய விளம்பரப் படத்தில் ரன்வீர் சிங்

புத்தம் புதிய மீன் மற்றும் இறைச்சிக்காக முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட மின்-வர்த்தக செயல்தளங்களுள் உலகின் மிகப்பெரியதான ஃபிரெஷ்டூஹோம், பிராண்ட் தூதராக பிரபல பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் இடம்பெறும் #நோஷார்ட்கட்ஸ் (#NoShortcuts) என்ற புதிய விளம்பர பரப்புரை திட்டத்தை தொடங்கியிருக்கிறது.


எவ்வித குறுக்குவழிகளையும் மேற்கொள்ளாமல் பொறுப்பாகவும், நேர்மையாகவும் வளர்க்கப்படுகின்ற, கொள்முதல் செய்யப்படுகின்ற மற்றும் கையாளப்படுகின்ற இறைச்சிகள் மற்றும் மீன், இறால் உட்பட கடல் உணவுகளை நுகர்வோருக்கு வழங்குவதில் ஃபிரெஷ்டூஹோம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் இந்த விளம்பர பரப்புரை திட்டம் நேர்த்தியாக வலியுறுத்துகிறது.


ஃபிரெஷ்டூஹோம் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஷான் கடவில் கூறியதாவது: சமைத்து உண்பதற்கு பாதுகாப்பான மற்றும் தூய்மையான மீன் மற்றும் இறைச்சியை கண்டறிவதற்கான விருப்பத்தோடு எமது இப்பயணத்தை தொடங்கினோம்.

எங்களது செயல்பாடுகள் அனைத்திலும் மையக் கருவாக இருப்பது இந்த அம்சமே. நுகர்வோர்களுக்கு 100% புத்தம் புதிய மற்றும் வேதிப்பொருட்களே சிறிதளவு கூட சேர்க்கப்படாத தயாரிப்பு பொருட்களை மட்டுமே நுகர்வோர்களுக்கு வழங்குவது எங்களது குறிக்கோளாகவும், செயல்பாடாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. எந்தவொரு குறுக்கு வழிகளையும் நாங்கள் எடுப்பதில்லை.


உட்கொள்வதற்கு உகந்தது என்று நாங்களே கருதுகின்ற தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்வதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
விற்பனை செய்யும் பொருட்களில் அவற்றின் ஊட்டச்சத்தும், தரமும் சிறிதளவும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் மற்றும் 24 மணி நேரங்களுக்குள் அது நுகர்வோரிடம் டெலிவரி செய்யப்படுவதையும் வலுவான வழங்கல் சங்கிலித்தொடர் செயலமைப்பு உறுதி செய்கிறது என்றார். பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் கூறியதாவது:

சாலையில் பயணிக்கும்போதோ, பணியாற்றும்போதோ அல்லது இக்கட்டான சூழ்நிலைகளிலோ பல நேரங்களில் நாம் குறுக்குவழிகளை எடுக்கிறோம். ஆனால், எளிதான இந்த வழிமுறையை மேற்கொள்வதில் ஃபிரெஷ்டூஹோம் எள்ளளவும் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை என்றார்.
ஆகில்வி இந்தியாவின் சிஇஓக்களான ஹர்ஷத் ராஜதியாக்ஷா மற்றும் கைனாஸ் கர்மாக்கர் இவ்விளம்பரம் குறித்து பேசுகையில், இந்நிறுவனம் எளிதான வழியைப் பின்பற்றுவதில்லை.

சரியான வழிமுறையை மட்டுமே பின்பற்றுகிறது. இந்த உண்மையைச் சார்ந்துதான் நோஷார்ட்கட்ஸ் என்ற இந்த விளம்பர செயல்திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img